மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்

by Editor / 07-09-2022 08:40:29am
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம்

கேரள மாநிலம், தேனி மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மதுரை வைகை ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வைகை ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடுவதால் மதுரை கோரிப்பாளையம், யானைக்கல், மதிச்சியம், தரைப்பாலம், தென்கரை, வடகரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via