தமிழகத்தில் 7 நாட்கள்  டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

by Editor / 30-09-2021 07:02:12pm
தமிழகத்தில் 7 நாட்கள்  டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை நடைபெறும் நாள் என மொத்தம் 7 நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் மூடப்படும் என அதிரடியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேர்தல் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களிலும், அதேபோல் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளான அக்டோபர் 12ஆம் தேதியும் மதுக்கடைகள் செயல்பட அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.


இதனை அடுத்து மொத்தம் ஏழு நாட்கள் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டு விடும் என்பதால் மது பிரியர்கள் முன்கூட்டியே ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நாளில் கள்ள மார்க்கெட்டில் மதுவிற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சீரிய முறையில் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் பாதுகாப்பு தேர்தல் நடத்துவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் முறையாக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via