பிரதமர் மோடி உடன், கமல்ஹாசன் எம்பி சந்திப்பு.

by Staff / 07-08-2025 09:42:38pm
பிரதமர் மோடி உடன், கமல்ஹாசன் எம்பி சந்திப்பு.

நடிகரும்,மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமலஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன்.  ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்."என பதிவிட்டுள்ளார்.

 

Tags : பிரதமர் மோடி உடன், கமல்ஹாசன் எம்பி சந்திப்பு.

Share via