மகாராஷ்டிரா வெடி விபத்தில் 4 பேர் பலி

by Staff / 04-11-2023 12:03:41pm
மகாராஷ்டிரா வெடி விபத்தில் 4 பேர் பலி

மகாராஷ்டிராவில் ராய்காட் மாநிலத்தில் மருந்து தயாரிக்கும் ஆலையில் நேற்று பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 11 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மஹாட் எம்ஐடிசி பகுதியில் உள்ள நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo