திண்டுக்கல்லில்  அனுமதியின்றி  மது விற்ற 6 பேர் கைது,  400 பாட்டில்கள் பறிமுதல் 

by Editor / 30-06-2021 04:25:40pm
திண்டுக்கல்லில்  அனுமதியின்றி  மது விற்ற 6 பேர் கைது,  400 பாட்டில்கள் பறிமுதல் 

 

திண்டுக்கல் நகர் பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவு க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சத்தியசீலா காவலர்கள் ரஞ்சித்குமார், கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திண்டுக்கல் நகர் பகுதியில் 
அதிரடி சோதனை நடத்தினர் அப்போது  சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மதுபானங்களின் விற்பனை செய்த பாட்டில் மணி, மலர் சின்னதம்பி, முத்துப்பாண்டி, கிருஷ்ணன், ராஜா, மூர்த்தி, உட்பட 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.

செ.சிவக்குமார்.திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ‌.

 

Tags :

Share via

More stories

Logo