மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைசேதங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினர்.

by Editor / 12-11-2021 11:49:43pm
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைசேதங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆய்வு. 

தரங்கம்பாடி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, மெய்யநாதன் அடங்கிய குழுவினர் நீரில் மூழ்கிய சம்பா பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில்  கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு முறையாக தூர்வாரும் பணியை மேற்கொள்ளாததால் தற்போது மழை வெள்ள பாதிப்பிற்கு தமிழக மக்கள் உள்ளாகியுள்ளனர். 
ஆறுகள், குளங்கள் தூர் வாராமல் கடந்த அதிமுக அரசு விளம்பரத்தை மட்டும் தேடிக் கொண்டதாகவும்  குற்றச்சாட்டினார்.மேலும் . சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான உரம் பூச்சி மருந்து உள்ளிட்ட இடு பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும்,
மழையால் பாதித்த பயிர்கள் குறித்து உரிய முறையில் வேளாண் துறை மூலம் கணக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளோம் என்றார்.
இதில் வேளாண் உற்பத்தி ஆணையர்  சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குனர் அண்ணாதுரை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் எம்பி ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via