பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கஞ்சநாயக்கன்பட்டி கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்துச் சிதறியதில் இளைஞர் செல்வராஜ், சிறுவர்கள் கார்த்திக், தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு வந்தபோது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது.
Tags : பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.