மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் 4 பெண்கள் மீட்பு.

by Editor / 13-04-2023 06:34:02am
மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் 4 பெண்கள் மீட்பு.

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் இயங்கிவந்தது. இங்கு பாலியல் தொழில் நடைபெறுவதாக புதுக்கோட்டை டவுன் போலீசாருக்கு புகார்கள் சென்ற நிலையில், அங்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் சண்முகசுந்தரம் (35),மேலாளர் சுதா (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அந்த தங்கும் விடுதிக்கு நேற்று போலீசாரால் 'சீல்' வைக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo