மதுரை பகுதிகளில் ரேப்பிடோ பைக் டாக்ஸிக்கு தடை

by Editor / 13-04-2023 06:24:58am
மதுரை பகுதிகளில் ரேப்பிடோ பைக் டாக்ஸிக்கு தடை

மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதுரை பகுதிகளில் ரேப்பிடோ ஆப் மூலம் இயங்கி வரும் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார். ரேப்பிடோவில் பைக் ஓட்டும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். மேலும், ரேப்பிடோவில் இயங்கும் பைக்குகளை பறிமுதல் செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் பைக்குகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் சுமார் 40-க்கும் மேற்பட்ட ரேப்பிடோ பைக்குகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo