கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

by Staff / 14-04-2022 12:11:19pm
 கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனை தூய்மை பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், நோயாளிகளுடன் கலந்தாலோசித்து மருத்துவமனையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அம்மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, மருத்துவமனை வளாகம், வார்டுகள், கழிப்பறைகள் போன்றவற்றை தூய்மையாக வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கடந்த ஒருவாரமாக ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத நிலையை எட்டியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மீண்டும் கொரோனா தொற்று பரவினாலும் அதனைக் கட்டுப்படுத்த தேவையான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories