குற்றால அருவிகளில் நீராடுவதற்கு சுற்றுலா அய்யப்பபக்தர்கள் வருகை அதிகரிப்பு.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அருவிகளின் நகரமாக விளங்கும் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகளில்சீசன் காலம் முடிந்த பிறகும் தண்ணீர் கொட்டி வருவதை தொடர்ந்து தற்பொழுது இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காலை முதலே சுற்றுலாப் பயணிகள் நீராடுவதற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர் மழை இல்லாததின் காரணமாக அருவி களில் குறைந்த அளவை நீர் கொட்டினாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலை முதலே அதிகரித்து வருகின்றது குறைந்து கொட்டும் அருவி நீரில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத நடை திறக்கப்பட்ட நிலையில் பல பகுதிகளில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு குற்றால அருவியில் புனித நீராடி செல்ல வருகை புரிந்ததால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவதால் குற்றால அருவி கரை களைகட்டி காணப்படுகிறது.இதனால் குற்றாலம் வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..
Tags : குற்றால அருவிகளில் நீராடுவதற்கு சுற்றுலா அய்யப்பபக்தர்கள் வருகை அதிகரிப்பு.