2 சவர்மா கடைகள் மூடல்

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சவர்மா உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவர்மா உணவகங்களில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவக்குமார், சக்திமுருகன், காளிமுத்து மற்றும் ஜோதிபாசு ஆகியோர் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் 16 சவர்மா கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது காலாவதி தேதி இல்லாத 11 கிலோ சவர்மா ரொட்டிகளும், தரமற்ற 3 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், 10 கிலோ தப்புக்குறியீடான மசாலா மற்றும் சுகாதாரமற்ற வகையில் இருந்த மசாலாவும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
Tags :