தடுப்பூசி போடாவிட்டால்   சிம் கார்டுகள் முடக்கம் :பாகிஸ்தான்  எச்சரிக்கை

by Editor / 12-06-2021 04:44:52pm
தடுப்பூசி போடாவிட்டால்   சிம் கார்டுகள் முடக்கம் :பாகிஸ்தான்  எச்சரிக்கை



பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாணத்தின் அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் பல்வேறு நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வரதாதல் இந்த தடாலடி முடிவை அந்த மாகாண அரசு எடுத்துள்ளது. இந்த மாகாணத்தில் தடுப்பூசி செலுத்த அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியாததால் இந்த ஏற்பாட்டை கையில் எடுத்துள்ளது.
 அதே நேரத்தில் பாகிஸ்தானில் முதல் டோஸ் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாததும் இதற்கு ஒரு காரணம். பாகிஸ்தானில் இதுவரை 95,59,910 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 1.2 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via