போதைப் பொருள் கடத்தல் ...3 பேர் கைது

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப் படை போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து கண்காணிக்கின்றனர். இந்நிலையில், நுங்கம்பாக்கம் போலீஸார், வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில் அவர்களை சோதனை செய்த போது, மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர்களான திருநெல்வேலி சூர்யபாரதி (28), சென்னை சாலிகிராமம் கண்ணன் (35), செம்மஞ்சேரி ராம்குமார் (40) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.
Tags :