தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது
தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டம் (பொறுப்பு) காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. சந்தீஷ் இ. கா. ப அவர்கள் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. சதீஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. குணா மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ராஜபிரபு தலைமையிலான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை போலீசார் ஆகியோர் நேற்று (11. 11. 2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் வழ கொங்கராயகுறிச்சி ஆற்றுப்பாலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி எப்சிஜ குடோன், திருவிக நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் என்ற காடை காளி (30) என்பதும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி காளியப்பன் (எ) காடை காளியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி காளியப்பன் (எ) காடை காளி மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 11 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 8 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :