அடையாளம் தெரிந்த பெண்ணின் சடலம்

by Staff / 29-11-2022 02:27:43pm
அடையாளம் தெரிந்த பெண்ணின் சடலம்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தெப்பக்குளத்தில், அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக நேற்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இறந்து போனவர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பதும், இவருக்கு செல்வம் என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. விஜயலட்சுமிக்கு, மோகன் என்பவருடன் தகாத உறவு இருந்து வந்ததாகவும், இதுகுறித்து தட்டிக்கேட்ட கணவனுக்கு விஷம் கொடுத்து கொன்று, சிறைக்கு சென்றதும் தெரிய வந்துள்ளது.

மேலும், விடுதலையான பின்னர், மீண்டும் குடும்பத்தினர் சேர்த்துக் கொள்ளவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், பார்த்தசாரதி கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதும், தெரியவந்துள்ளது.
 

 

Tags :

Share via