கலைஞரின் மூத்த பிள்ளை முரசொலிக்கு அகவை 84-முதல்வர் வாழ்த்து.
முரசொலி பத்திரிகை தொடங்கி 84 ஆண்டுகள் ஆன நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக, தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84. அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். முரசொலி 1942 ஆம் ஆண்டு, 18 வயதான மு. கருணாநிதியால் தொடங்கப்பட்டது.
Tags : கலைஞரின் மூத்த பிள்ளை முரசொலிக்கு அகவை 84-முதல்வர் வாழ்த்து.



















