செவ்வாயில் பாறை மாதிரிகள் சேகரிப்பு பணி என்ன ஆனது?

by Editor / 05-09-2021 07:22:28pm
செவ்வாயில் பாறை மாதிரிகள் சேகரிப்பு பணி என்ன ஆனது?

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பாறைகள் சேகரிக்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்ய நாசா புகைப்படங்களுக்காக காத்திருக்கின்றன. ஆனால் இந்த முறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கலாம் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.ரோவர் தரையிறக்கப்பட்டதில் இருந்து இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சற்றே உயரத்தில் இருக்கும் சிடாடெல் (Citadelle) என்கிற மேட்டுப் பகுதி நோக்கி இயக்கப்பட்டது. ராஷெட் (Rochette) என குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் துளையிட்டு பாறை மாதிரிகளைச் சேகரிக்க பெர்சவரன்ஸ் ரோவர் குழுவினர் தேர்வு செய்தனர்.

விரல் அளவுக்கு தடிமனான பாறை மாதிரிகளை துளையிட்டு, டைட்டானியம் குழாய்க்குள் சேகரிக்கும் அளவுக்கு ரோவரில் இயந்திரங்கள் இருக்கின்றன.

பாறை மாதிரிகளை சிலிண்டரில் சேகரித்து மூடுவதற்கு முன், ரோவர் படம் எடுக்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாறை மாதிரிகளைச் சேகரிக்க முயன்ற போது, இந்த கட்டத்தில்தான் குழாயில் பாறை மாதிரிகள் எதுவும் இல்லை என்று உணர்ந்தனர். துளையிட்டு பாறை மாதிரிகளைச் சேகரிக்கும் அமைப்பு, பாறையை நொறுக்கி பொடியாக்கி இருந்தது. நொறுக்கப்பட்ட பாறை, அத்துளைக்கு அருகிலேயே விழுந்தன.

ஆனால் இந்த முறை ராஷெட்டில் பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகத்தான் தெரிகிறது. அதை அடுத்தடுத்து வரும் படங்கள் உறுதி செய்ய வேண்டும்.

பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை, இன்ஜெனியூட்டி என்கிற சிறிய ஹெலிகாப்டர் கண்காணித்து வருகிறது.

 

Tags :

Share via