முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் - ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார்.
இன்று 2026 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ஆளுநர் ஆர் .என் .ரவி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சொல்லி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனால் அங்கு பரபரப்பு உருவானது. தமிழக முதலமைச்சர் ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அறிவித்தார். தமிழ்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பட வேண்டும் என்கிற கருத்தை முன் வைத்து ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். கடந்த ஆண்டும் உரையை வாசிக்கவில்லை.இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து உரை வாசிக்கப்படாததற்கு தமிழக அரசு தயாாித்து கொடுத்துள்ள அறிக்கையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் இடம் பெற்றிருந்ததனால் வாசிக்கப்படவில்லை என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது..
Tags :


















