தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 189ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 189 ஆக குறைந்துள்ளது. மேலும், டெல்லி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Tags :