டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

by Staff / 28-09-2023 11:17:54am
டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை 26 ஆம் தேதி டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி அபிநிதி நேற்று இரவு உயிரிழந்தார். கடந்த 2 நாட்களாக சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via