சவரனுக்கு ரூ.560 சரிந்தது தங்கத்தின் விலை..

by Editor / 28-09-2023 11:08:56am
சவரனுக்கு ரூ.560 சரிந்தது தங்கத்தின் விலை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.5,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாடகளாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.888 குறைந்து ரூ.43,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா குறைந்து ரூ.76.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.76,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags : சவரனுக்கு ரூ.560 சரிந்தது தங்கத்தின் விலை..

Share via