அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி உருவாகுமா...........

by Editor / 13-03-2025 01:24:17pm
அதிமுக - பாஜக  மீண்டும் கூட்டணி உருவாகுமா...........

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் தங்களுக்குள் நெருக்கம் காட்டி வருவது கூட்டணிக்கான தொடக்கமா என அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
"இனிமேல் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அவர்களுடன் கூட்டணிக்கான வாய்ப்பே இனி இல்லை..." என கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுக. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித் தனியாக கூட்டணிகள் அமைத்து போட்டியிட்ட நிலையில் இரண்டு கூட்டணியுமே ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும் அதன்பிறகும்கூட, பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்றே தொடர்ந்து கூறி வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.இப்படி கறார் காட்டி வந்த ஈபிஎஸ்சின் பேச்சில் கடந்த சில வாரங்களாக திடீர் மாற்றம் காணப்பட்டு வருகிறது. அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ், திமுகவை வீழ்த்துவது மட்டுமே தங்களது குறிக்கோள் என கூறியதுடன், பாஜகவுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு அவர் தந்த பதிலும் மழுப்பலாகவே பார்க்கப்பட்டது.


 

 

Tags :

Share via