இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இன்று இலங்கை ரங்ககிரி தம்புள்ளை பன்னாட்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரண்களை பாகிஸ்தான் மகளிர் அணி எடுத்தது. அடுத்து ஆட வந்த இந்திய மகளிர் அணி 14.1ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்து பாகிஸ்தான் மகளிர் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags :