மீன் கட்லெட் செய்வது எப்படி?

by Admin / 29-07-2021 04:08:53pm
மீன் கட்லெட் செய்வது எப்படி?

 

தேவை

சதை அதிகமுள்ள மீன் – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)

முட்டை – 1

பிரட் தூள்தேவையானது

இஞ்சி, பூண்டு, விழுது – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்

மிளகுதூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை  1 (சிறிய கட்டு)

பச்சை மிளகாய் – 6

எண்ணெய்பொரிக்க

உப்புதேவையான அளவு

செய்முறை

       மீனில் மஞ்சள்தூள், சேர்த்து வேக விட்டு, முள், தோல் நீக்கி தூளாக்கிக் கொள்ளவும். இதில் மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும், வெங்காயம், .மிளகாய் சேர்த்து எலுமிச்சை சாறு ஊற்றி கலக்கி நீள வாக்கில் உருண்டை பிடித்துக் கொள்ளவும். பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டை ஊற்றி அதில் உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் உருண்டைகளை நனைத்து பின் பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

 

 

Tags :

Share via