சிக்கன் மஞ்சூரியன் செய்முறை
தேவை
எலும்பு நீக்கிய 1 அங்குலத்திற்கு – 450 கிராம் வெட்டிய கோழி துண்டுகள்
மேல் மாவுக்கு தேவையானவை
மைதா மாவு – 115 கி
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
கார்ன் ப்ளவர் – 50 கி
முட்டை – 1
உப்பு, தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
மேலே கொடுக்கப்பட்டுள்ள மாவுகளை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதில் கறி துண்டுகளை ஒவ்வொன்றாக தோய்த்து காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக வெட்டிய 30 கி வெங்காயம், 75கி மிளகாய், 50 கி பூண்டு, 30 கி குடைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் சோயா சாஸ், 1/4 டீஸ்பூன் வினிகர், 1/2 டீஸ்பூன் அஜினி மோட்டா சால்ட் சேர்த்து சிறிது Stok ஊற்றி தேவையான உப்பும், 1 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்ம் கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும். எல்லாம் சேர்த்து கட்டியாக வந்த பின் தனியாக பொரித்து வைத்திருக்கும் கறி துண்டுகளை அதனுடன் கலந்து உபயோகிக்கவும்.
குறிப்பு
ப்ராய்லர் கோழிதான் உபயோகிக்க வேண்டும். மற்ற கோழியாக இருந்தால் கறியை சிறிது வேக வைக்க வேண்டும்
Tags :