ரயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்லதடை 

by Editor / 22-10-2024 07:19:49am
 ரயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்லதடை 

தீபாவளி நெருங்கும் நிலையில், ரயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்ல ரயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது. மீறினால், சட்டப்படி கைது செய்து, அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், “பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது” என அறிவுறுத்தப்பட்டது.
 

 

Tags :  ரயில்களில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்லதடை 

Share via

More stories