இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்கள்

உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் 23 வயது பெண்ணை இரண்டு போலீஸ்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இம்ரான் மிர்சா என்ற போலீஸ்காரருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் அந்த பெண்ணை ஒரு குடியிருப்பில் வைத்திருந்தார். இதனிடையே இம்ரான் மற்றும் அவரது சகோதரரும் போலீஸ்காரருமான ஃபுர்கான் ஆகிய இருவரும் அந்த இளம் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Tags :