ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் எதிரொலி ஏராளமான பொது மக்கள் அகதிகளாக வெளியேற்றம்

by Staff / 24-03-2022 03:36:58pm
ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் எதிரொலி ஏராளமான பொது மக்கள் அகதிகளாக வெளியேற்றம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலில் இருந்து ஏராளமானோர் வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகள் தஞ்சம் அடைந்து வரும் நிலையில்.

உக்ரேனியர்கள்  பலர் குழந்தைகளுடன் ரூமேனியாவிற்கு படையெடுத்து வருகின்றனர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை கடந்த 29 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யாவிற்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனில் இருந்து தப்பிக்க அகதிகளாக வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை பொருள்களை ருமேனியா செஞ்சிலுவை சங்கத்தினர் வழங்கி வருகின்றனர்.

உக்ரைனில் இருந்து 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories