மழைக்கு ஒதுங்கிய முதியவர் மீது சுடுகாட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலி.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 65) விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை.
இதனையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சீனிவாசனை தேடி வந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்த சீனிவாசன் மணக்கறை ஊராட்சிக்குட்பட்ட வடவேற்குடி சுடுகாட்டில் மழை காரணமாக ஒதுங்கிநின்றிருந்த நிலையில் சுடுகாட்டின் மேற்கூறை எதிர்பாராத விதமாக பெயர்ந்து விழுந்து இடிபாடுகளில் சீனிவாசன் சிக்கிபலியாகியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை அங்கு காலை கடனை கழிப்பதற்காக சென்ற நபர் சீனிவாசன் சுடுகாட்டின் மேற்கூறை இடிந்து விழுந்த இடத்தில் இறந்தநிலையில் கிடந்தது குறித்து தகவல் கொடுத்ததின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Tags : மழைக்கு ஒதுங்கிய முதியவர் மீது சுடுகாட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பலி.



















