குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

by Editor / 11-12-2021 11:31:47am
குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள அருள்மிகு  திருக்குற்றாலநாத சுவாமி குழல்வாய்மொழியம்மை  திருக்கோவிலில் ஐப்பசி விஷு திருவிழா, சித்திரை விஷு திருவிழா, திருக்கல்யாணத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் குற்றாலம் குற்றால நாதர் அலையத்தில்  வெகு விமரிசையாக நடைபெறும். இதனைப்போன்று  திருவாதிரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழா மொத்தம் பத்து நாட்கள் நடைபெறுகிறது. தினமும்  திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாதர் கோவில் எதிரே உள்ள கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாள் தோறும் சுவாமி அம்பாளுக்கு காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது. இரவு சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது. 18 -ஆம் தேதி சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், 20 -ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், காலை 5 மணிக்கு குற்றால நாதர் ஆலயத்தில் உள்ள திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 

Tags :

Share via