35 ஆயிரத்திற்கு கிடைக்கும் ஐபோன்

by Staff / 09-05-2022 01:09:57pm
 35 ஆயிரத்திற்கு கிடைக்கும் ஐபோன்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 மாடலை இந்தியாவில் ரூ. 35 ஆயிரத்து 513 விலையில் வாங்கிட முடியும். ஐபோன் 13 ஆப்பிள் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த மாடல் ஆகும். 

இதில் மேம்பட்ட கேமரா, சிறிய நாட்ச் மற்றும் பல்வேறு அதிரடியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஐபோன் 13 பேஸ் வேரியண்ட் 128GB மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை வழக்கமாக ரூ. 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இதனை ரூ. 44 ஆயிரத்து 477 வரையிலான தள்ளுபடியில் வாங்கிட முடியும்.


ஆப்பிள் நிறுவன சாதனங்களை விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களில் ஒன்று மேபில் ஸ்டோர். இந்தியாவில் மேபில் ஸ்டோர் தற்போது ஐபோன் 13 மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்து 387 வரையிலான தள்ளுபடி வழங்குகிறது. 

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ஐபோன் 11 போன்ற பழைய சாதனங்களை எக்சேன்ஜ் செய்து கூடுதல் தள்ளுபடிகளை பெறலாம். இப்படியாக ஐபோன் 13 மாடலை ரூ. 36 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும். 

கூடுதல் தள்ளுபடி வேண்டும் என்ற பட்சத்தில் ஐபோன் 13 மாடலுக்கு வழங்கப்படும் பைபேக் வேல்யூ சலுகையை கருத்தில் கொள்ளலாம். இதில் ஐபோன் 13 மாடலுக்கு ரூ. 24 ஆயிரம் வரை பைபேக் வேல்யூ வழங்கப்படுகிறது. 

பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்து புதிய ஐபோன் 13 வாங்குவோருக்கு மேபில்ஸ்டோர் கூடுதலாக ரூ. 5 ஆயிரம் போனஸ் வவங்குகிறது. இவை அனைத்தையும் சேர்க்கும் போது ஐபோன் 13 மாடலை ரூ. 35 ஆயிரத்து 513 விலையில் வாங்கிட முடியும்.  

 

Tags :

Share via