திமுகவை பலப்படுத்திய நடிகர் விஜய்.

by Admin / 07-12-2024 11:07:44am
 திமுகவை பலப்படுத்திய நடிகர் விஜய்.

 

நேற்று நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வை விகடன் பத்திரிக்கை - விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் நடத்தும் தேர்தல் வியூக நிறுவனமும் இணைந்து நடத்திய நிகழ்வில், தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் 200 தொகுதிகளில் கூட்டணியோடு சேர்ந்து வெற்றி பெறுவோம் என்கிற இருமாப்போடு இருக்கும் கட்சியை 2026 இல் மக்கள் மைனஸ் செய்வார்கள் என்று நேரடியாக திமுகவை இரண்டாவது முறையாக தாக்கியுள்ளார்.

இது அரசியல் களத்தில் ஒரு பெரும் அதிர்வலையை மீண்டும் உருவாக்கினாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற கருத்தை அவர் விதைத்திருப்பதாக ஒரு கருத்துருவை உருவாக்கினாலும் இது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு பல முறை ஆட்சி அதிகாரத்தில் வலுப்பெற்ற திமுகவை மீண்டும் வலுப்படுத்த விஜயின் பேச்சு காரணமாகியுள்ளது.

 யார் எதிரி என்பது திமுகவுக்கு வெளிப்படையாக தெரிந்து விட்டதோடு.. கூட்டணி கணக்குகளோடு என்கிற ஒரு தொடரை அவர் கையாண்டிருப்பது கூட்டணிகளை உடைப்பதற்கான முயற்சிகளை தங்கள் இயக்கம் செய்து வருவதாக மறைமுகமாக சொல்வது போன்று சொல்லி உள்ளது திமுக இடையே மீண்டும் ஒர் எழுச்சியை- ஒரு வேகத்தை உருவாக்கும் என்பதை விஜய் உணரக்கூடியதாக -திமுகவினுடைய செயல்பாடு- பங்களிப்புஇருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.

வெறும் சினிமா கவர்ச்சியை மட்டும் அடிப்படையாக வைத்து அவர் வெற்றி பெறலாம் என்கிற எண்ணத்தில் மிதந்து வருகிறார். இன்னும் ஒன்னரை ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் எந்த விதமான உள் கட்டமைப்பையும் வெளிப்படையாக செய்யாமல்.. ஆளுகிற மத்திய மாநில அரசுகளின் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகள்வெறும்  பேச்சோடு நகரும் அமைப்பாக மாறி, கேலிக்கூத்தாக மாறிவிட சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.

 தி.மு.க பல இயக்கங்களை, விஜய் போன்ற நட்சத்திர கட்சிகளின் எதிர்ப்புகளை எல்லாம் கண்டு வென்று வந்த கட்சி என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

சமூக ஊடகங்களில் அளிக்கப்படுகின்ற ஆதரவுகளும் மாநாட்டில் கூடிய கூட்டத்தை வைத்து அவையெல்லாம் வாக்குகளாக விழுந்து தன்னை தூக்கி நிறுத்தி விடும் என்று விஜய் நம்பிக் கொண்டிருப்பதை காலம் உணர்த்தக்கூடிய சூழலில் உணர்த்தலாம். இவரை அடிவொற்றியே  வி.சி.க. துணை பொதுச்செயலாளர் பேசிய பேச்சுக்களும் அந்த கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது நிதர்சனம்.

இருப்பினும், இவர் அந்த கட்சிக்குள் எத்தனை நாள் பயணிக்கப் போகிறார் என்பது கேள்வி. ஆதம் அர்ஜுன் வருகையின் போது கட்சிக்குள் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கட்சியை பெரிய நிலையில் வளர்க்க வேண்டும்.எனில், இவர் போன்றவர்கள் வந்தால் தான் நல்லது என்கிற கருத்தை கட்சியின் தலைவர் வைத்ததை தொடர்ந்து இவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் ,தற்பொழுது கூட்டணியில் இருக்கின்ற ஒரு கட்சியினுடைய துணை பொதுச் செயலாளர் இன்னொரு மேடையில் இதுபோன்று பேசுவது அந்தக் கட்சியை பலகீனப்படுத்தும் முயற்சி என்பதை ஏன் உணரவில்லை

. தன்னை முன்னிலைப்படுத்தி, அந்த கட்சி தனக்கு கட்டுப்பட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இருப்பினும் ,விஜய் , ஆதவ் அர்ஜுன் இருவரின் பேச்சுக்களும் திமுகவை திமுக தொண்டர்களை புதிய வியூகங்களை வகுத்து 2026 வெற்றியை நோக்கி நகர்த்துவதற்கான பலத்தை கொடுத்து இருக்கிறது என்பது மட்டும் உறுதி.

கொட்ட..  கொட்ட சிறு புழுகூட குழவியாக மாறும் என்று சொல்வாா்கள்.அப்படியிருக்க..அசுர பலம் கொண்ட திமுக எப்படி தன்னை வலிமைபடுத்திக்கொள்ள களம் அமைக்கும் என்பதை அவதானிக்கவேண்டும்.

 

 

Tags :

Share via