தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்திற்கு வரும் ராகுல் காந்தி.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கட்சிகளின் தலைவர்களும் தமிழகம் நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி அடுத்த வாரம் தேர்தல் பரப்புரைக்காக தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார்.
Tags :