அரசியலில் களமிறங்கிய டிடிவி தினகரன் மனைவி
அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் மனைவி அனுராதா ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இதுவரை வெளிப்படையாக அரசியலில் ஈடுபடாத அனுராதா, கணவர் டிடிவி.தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடர்ந்து அங்கே சூறாவளிப் பிரச்சாரத்தில் குதித்திருக்கிறார். தினகரனின் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு போடி, கம்பம் பகுதிகளில் அனுராதா பிரச்சாரம் செய்து வருகிறார். அனுராதாவின் நேரடி அரசியல் பிரச்சாரம், அங்கு பெண் வாக்காளர்களை அதிகம் கவரும் என்றும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனுராதா களமிறங்குவர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags :