துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து

by Editor / 19-05-2025 01:25:16pm
துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ரத்து

துருக்கியில் உள்ள பல்கலைக்கழகங்கள் உடனான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுவதாக மும்பை ஐஐடி தெரிவித்தது. மும்பை ஐஐடியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான பரிமாற்ற திட்டங்கள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்டவைகளும் இதில் அடக்கம். இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் ராணுவ மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி கருத்து கூறியதால் அந்நாட்டுடனான உறவை மத்திய அரசு துண்டித்து வருகிறது.

 

Tags :

Share via