கார்த்தி ப.சிதம்பரத்திற்கு சீட் கிடைப்பதில் சிக்கல்..
சிவகங்கை மக்களவை தொகுதியை இம்முறை காங்கிரஸுக்கு வழங்க கூடாது என திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட திமுகவினர், தொடர்ந்து இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுப்பதால் திமுகவினருக்கான அங்கீகாரம் குறைந்துள்ளது. இந்த முறை நிச்சயம் திமுக போட்டியிட வேண்டும். இதுதான் தங்களின் விருப்பம் என அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதன் மூலம் 1971ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக நேரடியாக இந்த தொகுதியில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. 1967-71 திமுக - தா.கிருஷ்ணன் 1977-80 அதிமுக - பெரியசாமி தியாகராஜன் 1980-84 காங்கிரஸ் - ஆர்.வி.சுவாமிநாதன் 1984-96 காங்கிரஸ் - ப.சிதம்பரம் 1996-99 தமாகா - ப.சிதம்பரம் 1999-2004 காங்கிரஸ் - சுதர்சன நாச்சியப்பன் 2004-2009 காங்கிரஸ் - ப.சிதம்பரம் 2009-2014 காங்கிரஸ் - ப.சிதம்பரம் 2014-2019 அதிமுக - பி.ஆர்.செந்தில்நாதன் 2019-2024 காங்கிரஸ் - கார்த்தி ப.சிதம்பரம்
Tags :