10 ஆடுகள் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

by Staff / 05-07-2023 04:25:28pm
 10 ஆடுகள் மர்ம மரணம் - போலீசார் விசாரணை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா தேப்பெருமாநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அமுதா (68). இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் 11 ஆடுகள் மற்றும் ஐந்து குட்டிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஆடு மற்றும் குட்டிகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலையில் தோட்டத்தில் கட்டி விட்டு அமுதா வீட்டிற்குள் சென்று விட்டார். தொடர்ந்து நேற்று காலை அமுதா ஆடுகளை மேய்ச்சல் விடுவதற்காக சென்று பார்த்த போது பத்து ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுதா, திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர் உயிரிழந்த ஆடுகளை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டார்.
 

Tags :

Share via

More stories