by Staff /
05-07-2023
04:20:33pm
திருச்செங்கோடு மலையடி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 28). சம்பவத்தன்று இவரை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து, உடலில் கல்லை கட்டி மலையடி குட்டையில் மர்ம நபர்கள் வீசி சென்றனர். இந்த கொலையில் தொடர்புடைய திருச்செங்கோடு பச்சாகோயில் மேடு பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25 ), மலையடிகுட்டை பகுதியை சேர்ந்த பூவரசன் (23), பிரவீன் ராஜ் (27), விக்னேஷ் (27), பெரியசாமி (25) ஆகிய 5 பேர் நேற்று திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்பு சரணடைந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஆண்டு திருச்செங்கோடு மலையடி குட்டையில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தபோது ராஜசேகருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ராஜசேகரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 ேபர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்பாபு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரையும் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.
Tags :
Share via