போலி போலீஸ் ஆசாமி கைது.

by Staff / 10-11-2023 03:36:43pm
போலி போலீஸ் ஆசாமி கைது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில்போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவரை மடக்கி, வழக்கு பதிந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.குபேந்திரன் தன் இருசக்கர வாகனத்தை அளிக்கும்படி வாதாடியும், போலீசார் அளிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அவர், காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை எடுத்துக் கொண்டு, காவல் நிலையம் வெளியே இருந்த இருசக்கர வாகனம் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளார்.ஆற்காடு சாலையில் சிறிது துாரம் சென்றதும், இருசக்கர வாகனம் நின்றுள்ளது. பின், அதே இடத்தில் போலீஸ் சட்டை மற்றும் லுங்கி அணிந்து, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கி, போலீஸ் எனக் கூறி பணம் பறித்துள்ளார்.இவரின் தோற்றத்தை பார்த்து சந்தேகமடைந்த வாகன ஓட்டிகள், விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே அங்கு வந்த போலீசார், குபேந்திரனை கைது செய்தனர்.

 

Tags :

Share via