சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் சிக்கியது.

by Editor / 03-11-2022 09:56:54am
 சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  ரூ. 75 லட்சம் சிக்கியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை ரயில்வே காவல்துறையினர் கண்காணித்துவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவலைத்தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 75 லட்சம் சிக்கியது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது, பணத்தை எடுத்து வந்த இளைஞர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பணத்தை கொடுக்க வந்ததும் தெரிய வந்தது. இறுதியில் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo