விவசாயியை கொன்று தின்ற புலி.. அதிர்ச்சி

உத்தரபிரதேச மாநிலம் துத்வாவில் 50 வயது விவசாயி ஒருவர் புலியால் கொல்லப்பட்டார். கடந்த வாரம் கரும்பு தோட்டத்தை பார்க்க சென்ற விவசாயி காணாமல் போனார். இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மேற்கொண்ட தேடுதலின் போது சடலத்தின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் அருகே புலியின் கால் தடங்களை பார்த்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :