அ.தி.மு.க வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு அமர்வு அமைக்க கோரி மனு
அ.தி.மு.கவின் இரு பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி ஒ.பன்னீர்செல்வம்,வைரமுத்து மனு தாக்கல்செய்திருந்தனர்.இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.செயசந்திரன் அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என்றும் ஜீன் 23 க்கு முந்தைய நிலையே கட்சியில் தொடர உத்தரவு பிறப்பித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்தார் .ஒ.பன்னீர் செல்வம் மேல் முறையீடு வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின்பே உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று கேவியட் மனு தாக்கல் செய்தார்.இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளநிலையில்,ராம்குமார் ஆதித்தன்,சுரேன் ஆகியோர் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.அக்கடிதத்தில்அ.தி.மு.க பொதுக்குழு நிர்வாகிகள் நியமனம், உட்கட்சி த்தேர்தல் தொடர்பான விசாரணை நடத்த சிறப்பு அமர்வுஅமைக்க லேண்டுமென்று கோரியிருந்தன ர். இக்கடிதம் கொடுத்தவர்களை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டார் . வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது வேறு நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா என்று கேட்டு, அ.தி.மு.க தொடர்பான அனைத்து வழக்குகளையும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி பட்டியலிட பதிவுத் துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.
Tags :