மணல் குவாரிகள் முற்றிலும் முடங்கியது- 500 கோடி இழப்பு

தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.இதில் அமைச்சர்கள் வீடுகளும் தப்பவில்லை.இந்நிலையில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் சிக்கி உள்ளனர். இவர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது அங்கிருந்த ஒப்பந்த தாரர்களின் ஆட்கள் ஓட்டம் பிடித்தனர். தற்போது சோதனைகள் முடிந்தாலும், யாரும் வேலைக்கு வரவில்லை.
இதனால் யார்டுகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் பணிகள் முடங்கியுள்ளது. 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறது. ஆன்லைன் முறையில் மக்கள் பணம் செலுத்தினாலும், லாரிகளுக்கு யார்டுகளில் மணல் அள்ளிப் போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.பணம் செலுத்தியவர்களுக்காக மணல் அள்ளிச் சென்ற லாரிகள் மணலுக்காக காத்திருக்கின்றன. இந்த யார்டுகளில் 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை. இதனால் ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :