தமிழக கேரளா எல்லையில்  தமிழக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் ஆய்வு.

by Editor / 29-11-2023 07:57:25pm
தமிழக கேரளா எல்லையில்  தமிழக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் ஆய்வு.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கள் சம்பந்தமாக கண்காணிக்கும் பொருட்டு தமிழக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர்  ஜோசி நிர்மல் குமார் மற்றும் தென் மண்டல  உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ்  மற்றும் திருநெல்வேலி சரக காவல் துணை  கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் திருமதி கலா காவல் ஆய்வாளர் மற்றும்  சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர்  இன்று தமிழக கேரள எல்லையான  தென்காசி  மாவட்டத்தில் உள்ள   புளியரை, மேக்கரை காவல் சோதனை சாவடிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பது பற்றியும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் பொது விநியோக பொருட்கள் சரியாக சென்றடைகிறதா என்பது குறித்தும்  ரேஷன் அரிசி கடத்தல் மட்டும் பதுக்கலில் ஈடுபட்ட நபர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைவாக நடத்த அறிவுரை வழங்கியும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்ட வாகனங்களை ஏலத்தில் விட அறிவுறுத்தியும் தென்காசி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அறிவுரை கூறினார்கள் .

 

Tags : தமிழக கேரளா எல்லையில்  தமிழக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் ஆய்வு.

Share via