மூட்டை மூட்டையாக 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை.

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு சொகுசு கார் மற்றும் லாரியில் மதுரை பேரையூர் கம்மாளப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் , ரமேஷ், கூடல்நகர் பகுதியை சேர்ந்த தெய்வம் , தினமணி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 4 பேர் 322 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த நிலையில் ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் உத்தரவிட்டார்.
Tags : மூட்டை மூட்டையாக 322 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை.