மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா  இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது

by Editor / 29-04-2025 08:55:40am
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா  இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது

உலகப்புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா இன்று  காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள், மிதுன லக்கனத்தில் கொடியேற்றம் நடைப்பெற உள்ளது.அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சிஅம்மனும்,  சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனா். இன்று மாலை சுந்தரேஸ்வரர் கற்பக விருட்சம் வாகனத்திலும் மீனாட்சி அம்மன் சிம்மம் வாகனத்திலும் பரிவார மூர்த்திகளுடன் நான்கு மாசி வீதிகளில் வீதி உலா நடைபெறுகிறது.

 

Tags : மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா  இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது

Share via