பாமக வன்னியர் மகளிர் மாநாட்டில் ராமதாசுக்கு அருகில் முகுந்தன்.

by Staff / 10-08-2025 05:55:45pm
பாமக வன்னியர் மகளிர் மாநாட்டில் ராமதாசுக்கு அருகில் முகுந்தன்.

பாமகவில் தலைமை பதவிக்கான யுத்தம் ராமதாஸ், அன்புமணி இடையே நடந்து வருகிறது. குடும்பத்துக்குள் நடந்த சண்டை கட்சியை பிளவுபடுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் இன்று (ஆகஸ்ட் 10) நடைபெறும் பாமக வன்னியர் மகளிர் மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் கலந்துகொண்டார். ராமதாசுக்கு அருகில் முகுந்தன் (ராமதாஸின் மகள் காந்திமதி மகன்) உட்கார இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

Tags : பாமக வன்னியர் மகளிர் மாநாட்டில் ராமதாசுக்கு அருகில் முகுந்தன்.

Share via