சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்.. தீயில் தள்ளி கொல்ல முயற்சி

by Editor / 23-07-2025 01:50:40pm
சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்.. தீயில் தள்ளி கொல்ல முயற்சி

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கவுதம் (27) என்பவர் திருமண ஆசைக்காட்டி தன்னை கர்ப்பமாக்கியதாக, சிறுமி ஒருவர் தனது குழந்தையுடன் போலீசில் புகார் அளித்தார். 7 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமியிடம் சமரசம் செய்து, கவுதம் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு மனைவி, பெற்றோர் இருந்துள்ளனர். இந்நிலையில், வீட்டிற்கு தீ வைத்த குடும்பம், சிறுமியை தீயில் தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via