பெர்முடா முக்கோணம் சுற்றுலா செல்வோருக்கு விளம்பரம் முழு பணத்தை திருப்பி தருவதாக ஏஜென்சி உறுதி

by Staff / 29-05-2022 01:51:19pm
பெர்முடா முக்கோணம் சுற்றுலா செல்வோருக்கு விளம்பரம் முழு பணத்தை திருப்பி தருவதாக ஏஜென்சி உறுதி

பெர்முடா முக்கோணப் பகுதிக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா அழைத்து செல்லும் டிராவல் ஏஜென்சி ஒன்று கப்பல் மாயமாக மறைந்து விட்டால் முழு பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதி அளித்துள்ளது. அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ள வரையறுக்கப்பட்ட பகுதியான பெர்முடா முக்கோணத்தில் நிறைய விமானங்களும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான வாழ்நாள் சலுகையாக அந்த ட்ராவல் நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தில் கவலைப்படாதீர்கள் இந்த பெர்முடா முக்கோண பயணத்தில் எதிர்பாராத விதமாக மாயமாகிவிட்டார் உங்கள் பணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo